சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்தவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்
படுகொலை செய்யப்பட்டுள்ள ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரம துங்கவின் பூதவுடல் இன்று நண்பகல் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.
இதேவேளை லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு காரணமானவர்களை தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப் பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
பல்வேறு கோணங்களிலும் தீவிர விசார ணைகளை முடுக்கி விட்டிருக்கும் இவ்விசேட பொலிஸ் குழுவினருக்கு ‘சண்டே லீடர்’ பிரதம ஆசிரியரின் கொலையுடன் தொடர்புபட்டவர்கள் உள்ளிட்ட பல இரகசியங்கள் தெரியவந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்தும் வகையில் இப்பொலிஸ் குழுவினர் மும்முரமாக செயற்பட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கிரிமண்டல மாவத்தை யிலுள்ள அன்னாரது இல்லத்திலிருந்து பூதவுடல் நாளை நண்பகல் 12 மணிக்கு நாரஹேன்பிட்டி சந்திக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து பூதவுடல் பெருந்திரளான மக்கள் ஊர்வலத்துடன் பொரள்ளை கனத்தை மயானத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது பின்னர் 2 மணியளவில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கலைஞர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்களென பலர் லசந்தவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply