மனிதத்திற்கு எதிரான புலிகளின் வன்முறைகள்

இலங்கை பாதுகாப்பு அமைச்சு, விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று வெளியிட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

கடந்த முப்பது ஆண்டு காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட குற்றச்செயல்களையும், யுத்தத்தின் போது அப் பிரதேசத்தில் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதனையும் இந்த ஆவணப்படம் உலகத்திற்கு வெளிப்படுத்தும் என தேசியபாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

‘மனிதத்திற்கு எதிரான விடுதலைப்புலிகளின் வன்முறைகள்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

பிரித்தானியாவின் ‘சனல்4 ‘ தொலைக்காட்சி தயாரித்த ‘இலங்கையின் கொலைக்களம் ‘ஆவணப்படம் உட்பட பல்வேறு போர்க் குற்ற ஆவணங்கள் சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை முறியடிக்கும் நோக்கில் யுத்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் சாட்சியங்களாக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply