அவஸ்தையுறும் வன்னிச் சிறுமிக்கு உதவுங்கள்
ஷெல் தாக்குதல்களின் போது தனது இடது கண் பாதிக்கப்பட்ட நிலையில் அவஸ்தைப்படும் மதுஷா என்ற 6 வயது சிறுமியையே படத்தில் காண்கிறீர்கள்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பிலுள்ள கோம்பாவில் என்ற ஊரைச் சேர்ந்த இந்தச் சிறுமிக்கு சிகிச்சை வழங்க பெருந் தொகை நிதி தேவைப்படுகிறது.
இந்தச் சிறுமியின் இடது பக்கக் கண்ணுக்குள் ஷெல் துண்டொன்று சிக்கி இருப்பதால் சிறுமி பெரும் கஷ்டப்படுகிறார்.
இவருக்கு சிகிச்சையளிக்க பெருந்தொகை நிதி தேவைப்படுவதால் தனவந்தர்கள் கொடையாளிகள் விரும்பினால் உதவி வழங்க முடியும். மேற்படி சிறுமியின் கண்ணில் சிக்கியுள்ள ஷெல் சிதறு துண்டினை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவதுடன் பார்வையை மீளப் பெறுவதற்கான சிகிச்சையும் அளிக்கப்படல் வேண்டும்.
கடந்த மூன்று வருடங்களாக வவுனியா நிவாணக் கிராமத்தில் தங்கியிருந்து நேற்று முன்தினம் முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோம்பாவில் பகுதியிலுள்ள திம்பிலி கிராமத்தில் இச்சிறுமி தனது பெற்றோருடன் மீள்குடியேறியுள்ளார்.
சிறுமிக்குரிய சிகிச்சையை பெற்றுக் கொடுக்கக்கூடிய பொருளாதார நிலையில் பெற்றோர் இல்லாததால் கருணை உள்ளம் கொண்ட தலைவர்கள், அமைப்புகளின் உதவியை நாடி நிற்கின்றனர்.
கடற்றொழில் மட்டுமே தெரிந்துள்ள சிறுமியின் தந்தை நா. மகேந்திரன் ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்டு கடற்றொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளார்.
இவரது தலையிலும், முள்ளந்தண்டிலும் ஷெல் சிதறு துண்டுகள் உள்ளன. இதனால் அவர் கூலித் தொழில் செய்து வருகிறார்.
இவர்களுக்கு 1 1/2 வயதில் மேலுமொரு பெண் குழந்தை உள்ளது.
உதவி செய்ய விரும்புகிறார். நா. மகேந்திரன், 2 ஆம் வட்டாரம், திம்பிலி வீட்டுத் திட்டம், கைவேலி, புதுக்குடியிருப்பு என்ற விலாசத்துடன் தொடர்புகொள்ளலாம். அல்லது 077- 9379483 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு சிறுமியின் தந்தையாரான நா. மகேந்திரனுடன் தொடர்புகொண்டு விபரங்கள் அறிய முடியும்.
நா. மதுஷா என்ற இந்தச் சிறுமி மூன்று வயதாக இருக்கும்போதே ஷெல் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply