ஜனாதிபதி 10ம் திகதி பாகிஸ்தான் பயணம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையில் பாகிஸ்தானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவூள்ளாரென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப்அலி சர்தாரியின் அழைப்பின் பேரில் செல்லும் ஜனாதிபதி- அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசா கிலானி மற்றும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

பாகிஸ்தானில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் யூசுப் ராஸா கிலானி ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

அரசியல்- பாதுகாப்பு – கலாசாரம்- உல்லாசப் பயணத்துறை – ஊடகத்துறை- பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகியன தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply