ஜனாதிபதி மாளிகைக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம்
ஜனாதிபதி மாளிகைக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறும் திட்டத்தை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
2016ம் ஆண்டிற்குள் இலங்கையின் மின்சாரத் தேவையில் பத்துவீதத்தை இயற்கை உற்பத்தி மூலம் பெற்றுக்கொள்ள மஹிந்த சிந்தனை கருத்திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிணங்கவே நேற்று கொழும்பு ஜனாதிபதி மாளிகை சூரிய ஒளி மின்சார செயற்திட்டத்துடன் இணைக்கப் பட்டது.
ஜனாதிபதி மாளிகையில் சுமார் 5 கிலோ வாட் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகை யில் சூரிய சக்தி மின்சார தொகுதி அமைக்கப்பட்டு ள்ளதுடன் இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக இய ங்க வைத்தார்.
பகலில் மாத்திரம் இதனூடான மின்சாரத்தைப் பாவனைக்குப் பெற்றுக்கொள்வதுடன் மிகுதியான மின்சாரம் தேசிய மின் இணைப்புத் தொகுதியுடன் இணைக்கப்படவுள்ளது. இரவு நேரங்களில் வழமை போன்றே தேசிய மின் தொகுதியிலிருந்து மின்சாரம் பெறப்படவுள்ளது.
இதன் மூலம் மின்சார தேவை முழுமையாகிறது. இந்த இரண்டு வித மின்சார அலகின் அளவு வித்தி யாசப்படுவதுடன் இது ‘நெட் மீட்டரில்’ என அறிமுகப்படுத்தப் படுகிறது. இப்புதிய முறை செயற் படுத்தப்படும் விதம் தொடர்பில் லங்கா தனியார் மின்சார நிறுவ னத்தின் மின் பொறியியலாளர் கலாநிதி நரேந்த சில்வா ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினார்.
இதற்கான செலவு 1.3 மில்லி யனாகும். எதிர்காலத்தில் இத்தகைய சூரிய மின்சார தொகுதி குறைந்த செலவில் வீடுகளுக்காக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply