தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையில் தங்கியுள்ள பதின்மூன்று பிளஸ் வெற்றி

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி என்பது தொடர்பாகவே பெரும்பா லான கருத்தாடல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்வு காணும் விடயத்தை முன்வைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமக்குத் தெரிந்த சில கருத்துக்களை முன்னிலைப்படுத்தி மக்க ளைத் தமது பக்கம் ஈர்க்க முற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. அரசியலில் வங்குரோத்து நிலை கண்ட சில அரசியல் வாதிகளோ இந்த விடயத்தைப் பெரும் தர்க்க மாக்கி வருவதுடன், சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கள் ஒற்றுமைப்பட்டாலும் அவர்களை ஒன்றுசேர விடாது பிரித்தாளும் தந்திரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை வந்திருந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரிடம் தெரிவித்த பதின் மூன்று பிளஸிற்கும் அப் பால் சென்று தீர்வுகாணத் தயார் எனும் விடயத்தை நாட்டிலுள்ள பெரும்பாலான முக்கிய மான கட்சிகள் அனைத்துமே வரவேற்றுக் கருத்து வெளியிட்டன. தமிழ்த் தேசியக் கூட் டமைப்புக் கூட அதனை நல்லதொரு முன்னேற்றகரமான அறிகுறியாகக் கருதியது.

இந்நிலையில் இந்த பதின் மூன்று பிளஸை அதற்கு மேலாகச் சென்று அமுல்படுத்து வது தொடர்பாக தமிழ் – முஸ்லிம் கட்சிகளிடையே ஒரு பொதுவான இணக்கப்பாடு காணப்படுவது மிகமிக அவசியம். ஏனெனில் வடக்கு, கிழக்கு பிரச்சினை என்று எழும் போது அதனை தமிழ்த் தரப்பிடம் மட்டுமோ அல்லது முஸ்லிம் தரப்பிடம் மட்டுமோ பேசித் தீர்க்க முடியும் என இனியும் இருந்துவிட முடியாது. இந்த இருதரப்பும் சகல விடயங்களிலும் இணங்கிக் கொண்டாலேயே அது முழுமை பெற்ற தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதேபோன்று அப்பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் பலமான ஆதரவைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் முதலில் தமக்கிடையே மனம் விட்டு உரையாட வேண்டும். வெறும் ஊடக அறிக்கைகளை விடுவதற்கும் பேட்டிகளை வழங்குவதற்குமாக இந்தச் சந்திப்புக்கள் இடம்பெறக் கூடாது. அவை தமக்கு வாக்களித்து உயர் பதவிகளில் அமர்த்தி இத்தனை வரப்பிரசாதங்களை அனுபவிக்கக் காரணமாக இருந்த மக்களது நலன்களைப் பேணுவதற்காக அமைய வேண்டும்.

“தமிழ் மக்களுக்கு வழங்குவதையெல்லாம் எமக்கும் தாருங்கள் என நாம் ஒருபோதும் கேட்டதில்லை, மாறாக இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களையும் சமதரப்பாக கணித் துச் செயற்படுவதுடன், அதிகாரப் பகிர்வில் சமனான பங்கை வழங்குமாறே கேட்கி றோம்” என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி அண்மையில் தெரி வித்திருந்தார். இதுவே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாகவும் உள்ளது. இதனை ஏற்று அல்லது இது தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு அவர்களுடன் பேசி ஒரு முடிவிற்கு வர வேண்டும்.

வடக்கு, கிழக்கு இணைப்பை சில முஸ்லிம் தலைவர்கள் விரும்பவில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேவையற்ற ஒரு விடயம் எனக் கூறும் சில தமிழ்த் தலைவர்க ளும் உள்ளனர். அரசில் அங்கம் வகிக்கும் சில பெரும்பான்மையினக் கட்சிகளும் இந்த மூன்று விடயங்களையும் எதிர்க்கின்றன.

இந்நிலையில்தான் அரசாங்கம் பாராளுமன்றத்தெரிவுக் குழு மூலமாக சகல அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வைக்காண முன்வந்தது. ஆனால் அதில் கலந்து கொள்ள முக்கிய தரப்பான தமிழ்க் கூட்டமைப்பிற்கு இஷ்டமில்லை. இதனால் வீணாக காலம் கடந்து செல்கிறது. தீர்வு வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கும் தமிழ்க் கூட்ட மைப்பு தனது நிலைப்பாடு இதுதான் என்று இன்னமும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. நேரத்திற்கு ஒரு கதையாகவே காணப்படுகிறது.

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் பின்னர் வெளியே வந்து அரசை விமர்சிப்பது வுமாக அது காலத்தைக் கடத்தி வருகிறது. இதனால் நஷ்டம் தமிழ் மக்களுக்கே என் பதை அவர்கள் இன்னும் உணரவில்லை.

அதேபோன்று வடக்கு, கிழக்கில் வாழ்ந்துவரும் தமிழ் பேசும் மற்றொரு இனமான முஸ் லிம்களும் கடந்த முப்பது வருடகால யுத்தம் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட இவ்விரு சமூகத்தையும் மீண்டும் கட்டியெழுப்பி அம்மக்களை அவர்களது சொந்த மண்ணில் வாழவைக்க வேண்டியது அம்மக்களால் தெரிவு செய் யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரதும் கடமையும் பொறுப்புமாகும்.

ஆனால் இவர்கள் அவ்வாறு சிந்திப்பதாகத் தெரியவில்லை. இன்று அரசாங்கமே அந்தப் பணியைச் செய்து வருகிறது. இவர்களோ மக்களையும், தீர்வையும் வைத்து தமது இருப்பை தக்கவைத்து அரசியலை நடத்தி வருகின்றனர்.

இல்லையேல் யுத்தம் முடிவடைந்து மூன்று வருடம் நிறைவு பெறவுள்ள நிலையிலும் மக்கள் முழுமையாக துன்ப துயரங்களிலிருந்து விடுபடாதுள்ளமையை இவர்களால் எவ் வாறு இரசித்துக் கொண்டிருக்க முடிகிறது? அரசாங்கம் செய்துவரும் அபிவிருத்தி, புனர மைப்பு, புனர்வாழ்வுப் பணிகளை விமர்சனம் செய்து கொண்டு தமது அரசியல் எதிர் காலத்தில் குறியாக இருக்கிறார்களே தவிர அவற்றுக்கு ஆதரவளித்து பணிகளைத் துரி தப்படுத்துவது நோக்கமாக இல்லை.

பதின் மூன்று பிளஸ் அமுலாக முதலில் தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். தத்தமது இதர சிறு சிறு கட்சிகளையும் இருதரப்பும் புறந்தள்ளாது அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்து செயற்படுவது எதிர்காலத்திற்கு நல்லது. அவர்களும் தமது உண்மை நிலை அறிந்து அதற்கேற்ப ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை முன் வைக்க வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply