இலங்கைக்கு சர்வதேச அழுத்தங்களின்போது பூரண ஆதரவு

சர்வதேச ரீதியாக ஏற்படும் எந்தவொரு சவால்களின் போது இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் சீனா மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளது.

சீனாவின் ஷெங்ஷி பிராந்தியத்தின் கம்மியூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவின் செயலாளர் யுஆன் சுங்கின், இலங்கை பிரதமர் டி.எம் ஜயரட்னவை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போது தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.

யுஆனுடன், 14 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இலங்கை பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இலங்கையுடன் கைகோர்த்து செயற்படுவதே சீனாவின் பிரதான நோக்கம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பலவற்றும் சீனா தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வருகின்றமையும் இதன்போது நினைவு கூறப்பட்டது.

அதனை மேலும் விரிவு படுத்திக்கொள்வது சீனாவின் நோக்கம் என யுஆன் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply