இலங்கைக்கு பாகிஸ்தான் தொழில் நுட்பங்கள்
சீனி உற்பத்தி, மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காகப் பாகிஸ்தான் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை இலங்கைக்கு வழங்குவதாக பாக்கிஸ்தான் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கான இரண்டு நாட்கள் பயணத்தை மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை இஸ்லாமாபாத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போதே பாகிஸ்தான் ஜனாதிபதி இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
இதன்போது, கடந்த 3 தசாப்த கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு பங்களிப்பு செலுத்திய பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான சில உடன்படிக்கைகளும் இருதரப்பிற்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடல் நடைபெறுவதற்கு முன்பதாக பாகிஸ்தான் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு பாகிஸ்தான் இராணுவம் அணிவகுப்பு மரியாதை நிகழ்த்தியது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply