அலைமோதும் பிரயாணிகள்; வெறிச்சோடிய தனியார் பஸ் தரிப்பிடங்கள்
நாடளாவிய ரீதியில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் யாழ். பேரூந்து நிலையத்தில் இன்று (13.02.2012) காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.
நாடு தழுவியரீதியில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று (12.02.2012) நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையினால், அரச பேரூந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில் யாழ். மாவட்டத்திலுள்ள தனியார் பேரூந்து உரிமையாளர்களும் பணிப் பகிஸ்கரிப்பில இணைந்கொண்டுள்ளதால் இன்று காலை முதல் பிரயாணிகள் தமது பயணங்களை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன், பேரூந்தில் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் காலை 10.00 மணிக்குப் பின்னரே பேரூந்து வாசலில் தொங்கியபடி பாடசாலைக்குச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பாக கோண்டாவில் போக்குவரத்துசபைத் தலைவர் கணேசபிள்ளை எமது கருத்துத் தெரிவிக்கையில், யாழ்.மாவட்ட மக்களின் போக்குவரத்து தேவைக்கேற்ப அதிகளவு சேவையில் ஈடுபடுத்துவதற்கான பேரூந்துகள் தம்மிடம் போதியளவு இல்லை. இருக்கின்ற பேரூந்துகளையே சேவையில் ஈடுபடுத்துகின்றோம் என்றார்.
இதேவேளை, தனியார் பேரூந்து சங்கத்தினர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் யாழ்.தனியார் பேரூந்து தரிப்பிடம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply