இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை ஈரான் வழங்கும்
இலங்கைக்கு நியாயமான விலையில் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகம் செய்ய முடியுமென இலங்கைக்கான ஈரானிய தூதுவர் டாக்டர் ரானி நாபீ தெரிவித்துள்ளார்.
அமைதியான நோக்கங்களுக்காகவே ஈரான் அணுத் தொழில் நுட்பத்தைபயன்படுத்தி வருவகிறது. செய்மதி ஒன்றை விண்ணுக்கு ஏவிய முதலாவது முஸ்லிம் நாடு ஈரான் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஈரான் அடைந்து வரும் வளர்ச்சியை அமெரிக்காவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே போலியான குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா சுமத்திவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி அடைந்து வரும்ந நாடுகள் மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும், நட்பு நாடான இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க முடியாது எனவும், தொடர்ச்சியாக ஈரான் எரிபொருள் விநியோகம் செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்த போதிலும் சில வழிகளைப் பயன்படுத்தி எரிபொருள் இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதன் மூலம் பலபிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply