நவநீதம்பிள்ளையின் கருத்தை இலங்கை நிராகரிப்பு

ஐ.நா அமைதிகாக்கும் பணி தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்தை ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரகம் நிராகரித்துள்ளதுடன், இது நியாயமற்றதும் ஒழுக்க நெறியை மீறுவதுமாகும் எனவும் கூறியுள்ளது.

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது தெரிவிக்கப்படும் கிலேசத்தை எம்மால் புரிந்துகொள்ள முடியும் என ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவை பான் மூனின் அமைதிக்காப்பு படைக்கான சிரேஸ்ட ஆலோசனைக்குழுவில் இணைத்துக் கொண்டமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியிருந்தார்.

இது விடயம் குறித்து பான் கீ மூனுக்கு நவநீதம்பிள்ளை கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
சவேந்திர சில்வா இறுதிக் கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமைதிகாக்கும் படைக்கான பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவில் சவேந்திர சில்வாவின் பெயரை ஐக்கிய நாடுகளுக்கான ஆசியக்குழுவும் மத்தியக்கிழக்கு குழுவுமே நியமித்துள்ளதாக நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்..

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply