டொல்பின் ஆறு கோடி ரூபா அபகரிப்பு: செய்தியில் உண்மையில்லை
சில இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் டான் ரிவி குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகிவந்த டொல்பின் தொலைக்காட்சி சேவை கடந்த வாரம் நிறுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் தமிழ் மக்களிடமிருந்து சுமார் ஆறு கோடி ரூபா அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்கள்.
எலெக்டோரெக் என்ற நிறுவனம் எமது கொக்குவில் அலுவலகத்திலிருந்து அந்த சேவையைத் தொடங்கியபோது, அவர்களுக்கு நாமும் உதவிவழங்கினோம். ஆனால் அதனை ஆரம்பித்த சில நாட்களில் கேபிள் ரிவியை ஆரம்பித்ததால் டொல்பின் சேவையை விற்பதில் ஆர்வம் காட்டவில்லை. மொத்தம் 96 பேர் மாத்திரமே சந்தாவைப் பெற்றுக்கொண்டார்கள். இவர்களில் 12 பேர் மாத்திரமே சுமார் 9 ஆயிரம் ரூபாவை செலுத்தி அந்த சேவையைப் பெற்றுக்கொண்டார்கள். (இந்த தொகை ஒரு வருட சந்தா 4800 ரூபாவும், றிசீவரின் விலை 4200 ரூபாவும் சேர்ந்தது. சிலருக்கு அதிலும் சலுகை வழங்கப்பட்டு 8000 ரூபாவிற்கும் வழங்கப்பட்டது). ஏனையவர்கள் அனைவரும் ஒருவருடத்திற்கான சந்தாவை மாத்திரமே செலுத்தினார்கள். அவர்களில் 39பேர் சந்தாவைக் கூட முழுமையாக செலுத்தவில்லை.
ஒரு வருடம் முடிந்ததும் கடந்த ஜனவரி மாதம் 10ம் திகதியே அதனை நிறுத்திவிட்டதுடன், றிசிவர்களை திரும்ப வாங்கிக்கொண்டு பணத்தை 12 பேருக்கும் திரும்பக் கொடுத்துவிட்டோம். அப்படியிருக்கையில் 6 கோடி ரூபா மக்களிடம் அபகரித்ததாக செய்திவெளியிட்டிருக்கின்றார்கள்.
தமிழ் ஊடகங்கள் எப்படி செய்திகளை வெளியிடுகின்றன என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
ஏலெக்டோரெக் நிறுவனம் அந்த சேவையை இப்போது தனியாக (டான் ரிவி அலுவலகத்தில் இருந்து நடாத்தாமல்) யாழ்ப்பாணத்தில் கலட்டி சந்தியிலுள்ள முகவரி ஒன்றிலிருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர் என்பதையும் அவர்களிடம் அதற்கான லைசன்ஸ் இருக்கிறதா இல்லையா என்பதையும் காலப்போக்கில் மக்கள் அறிந்துகொள்ளத்தான் போகின்றார்கள்.
அந்த செய்தியை வெளியிட்ட இணையத்தளங்கள், எமது இந்த செய்தியை வெளியிடமாட்டார்கள் என்பது தெரிந்தவையே. அதனாலேயே இதனை தேனீ இணையத்தளத்தில் வெளியிடவேண்டியேற்பட்டது.
-டான் ரிவி நிர்வாகம்
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply