இலங்கையில் முதலீட்டு சலுகைகள், நிவாரணங்கள் தொடர்பாக விளக்கம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைகழக மற்றும் தெற்காசிய கல்வி நிறுவகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த விஷேட கலந்துரையாடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றிருந்தார்.

யுத்த வெற்றியின் பின்னர் இலங்கை பெற்று கொண்ட முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் இதன்போது வினவப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதை நிலவரம், முதலீடு, இலங்கை முதலீட்டு சபை வழங்கும் சலுகை மற்றும் நிவாரணம் என்பன தொடர்பாக ஜனாதியினால் இதன்போது விளக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜென்கி கண்காட்சி மத்திய நிலையத்தில் இடம் பெறும் சிங்கப்பூர் வான் கண்காட்சியை பார்வையிட வருகை தருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பாரிய நீர் விநியோக திட்டத்தினை நேற்று கண்காணித்துள்ளார்.

இந்த நீர் விநியோகத்தின் சிறப்பம்சம், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நீர் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றமையாகும்.

இந்த நீர் விநியோகத்திட்டத்தை பார்வையிட சென்ற ஜனாதிபதியை அந்த நாட்டு சுற்றாடல்துறை அமைச்சர் வரவேற்றுள்ளார்.

இதன்போது நீர் விநியோக திட்டம் மற்றும் அதற்காக பயன்படுத்தும் தொழில்நுட்ப முறை தொடர்பில், சிங்கப்பூரின் சுற்றுலா துறை அமைச்சர், ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply