முல்லை உள்ளூராட்சித் தேர்தலில் புதிய வாக்களிப்பு நிலையங்கள்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று ஆகிய பிரதேசசபைகளுக்கான தேர்தலை நடத்தும் வகையில் புதிய வாக்களிப்பு நிலையங்களை தெரிவுசெய்வதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய பிரதேசங்கள் தொடர்பாக விசேட ஆய்வொன்றும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
வடமாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஆகியோரின் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்படுவதாக மேலதிக தேர்தல்கள்ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது வாக்களிப்பை நடத்துவதற்கான புதிய வாக்களிப்பு நிலையங்களை தெரிவு செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக நிறுவப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்கள் வர்த்தமானியிலும் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே வாக்களிப்பு நடத்தப்பட்ட அநேகமான வாக்களிப்பு நிலையங்கள் கடந்த கால யுத்தத்தினால் அழிவடைந்துள்ளதாலேயே இத்தகைய ஆய்வொன்றை நடத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply