பாதிக்கப்பட்ட சமூகங்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளத் தவறிவிட்டோம்: முஸ்லிம் சிவில் சமூகம் கூட்டறிக்கை

பாதிக்கப்பட்ட சமூகங்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளத் தவறிவிட்டோம். எனினும் எம்மை நாம் சுயபரிசோதனை செய்து கொள்வது எமது கடமையாகும். தமிழ் சிவில் சமூகம் வைத்துள்ள கருத்துகளை வரவேற்கிறோம். இவ்வாறு தெரிவிக்கும் கூட்டறிக்கையொன்றை முஸ்லிம் சிவில் சமூக உறுப்பினர்களும் குழுக்களும் இணைந்து வெளியிட்டுள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் 147 பேர் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் முழு விபரம் வருமாறு;

மீளிணக்கம் பற்றிய முஸ்லிம் சிவில் சமூக உறுப்பினர்களதும் குழுக்களினதும் கூற்று – 17 பெப்ரவரி 2012

இருபத்தைந்து வருட யுத்தம் முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதையும்; நிலையான சமாதானத்தினை ஏற்படுத்துவதையும் உறுதிப்படுத்துவதில் இலங்கை பரந்த வீச்சிலான சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இடம் பெயர்ந்தவர்கள் பகுதியளவிற்குத் திரும்பி வருதல், போரினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு புனர் வாழ்வளித்தல், அத்தியாவசிய சேவைகளை மீளத் தொடங்கித் தரமுயர்த்துதல், தேர்தல்களை நடத்துதல், பெரும் அபிவிருத்திக் கருத்திட்டங்களை அமுல்படுத்துதல் போன்றவை உள்ளடங்கிய பல முனைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்ற போதிலும், யுத்தத்திலிருந்து நீடுறுதியானதும் அர்த்தபூர்வமானதுமான சமாதானத்திற்குத் திரும்புவதற்கு தடைகளாக இருக்கின்ற பல பிரச்சினைகள் களத்திலே தீர்க்கப்படாமலிருக்கின்றன. குறிப்பாக, மீளிணக்கத்திற்கான சவாலானது தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கின்றது. இப்போது நாம் செயற்படுவதற்குத் தவறுகின்றமையானது, மோதலையும் அதன் தாக்கங்களையும் தீர்ப்பதற்கு சகல சமுதாயங்களுக்கும் கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பினை இழப்பதற்கு வழிகோலும் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

முஸ்லிம் அரசியல்வாதிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் முன் செல்வதற்காக கூட்டுப் பொறுப்பினை எடுப்பதற்கும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிகளையும் செயன்முறைகளையும் வடிவமைப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். ஏனைய இனக்குழுமங்களைச் சேர்ந்த மக்களின் துயரங்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என அரசியல்வாதிகளையும் சமூகக்குழுக்களையும்; அனைத்து இனக்குழுமங்களையும் நாம் வேண்டுவதுடன் மீளிணக்கத்தினை நோக்கிச் செயற்படுவதற்கான செயன்முறையினை உருவாக்குமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

சிவிலியன்கள் இலக்கு வைக்கப்பட்டமை, பரந்து நிகழும் வன்முறை, பேரினவாத அரசியல், சமுதாயங்களின் மத்தியில் பயம் மற்றும் சந்தேகம் ஆகியவற்றினையே யுத்தம் ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் காரணமாக யுத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட சக வாழ்வு மற்றும் சமூக மற்றும் பொருளாதாரப் பரஸ்பரத் தங்கியிருப்பு ஆகியவை பாரதூரமாகச் சீர்குலைந்துள்ளன. இது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் வாழும் இனச் சமுதாய மக்கள் தம்மைத் துருவமயப்படுத்திக் கொண்டு தமக்குள் வட்டத்தைப் போட்டு அதற்குள் தங்களைக் குறுக்கிக் கொள்வதற்கு இட்டுச் சென்றுள்ளது. அதே வேளை அரசும், தமிழ் போராளிகளும், சகல குழக்களையும் சேர்ந்த அரசியல்வாதிகளும் வன்முறைக்கும் அதன் பல் பரிமானங்கொண்ட தாக்கங்களுக்கும் அடிப்படைப் பொறுப்புடையவர்களாவார்கள். சமயத்தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள், சமூகத் தொண்டர்கள் மற்றும் ஏனையோர் அவர்களின் செயற்பாடுகள் மூலமாகவும் மௌனம் மூலமாகவும் இச் சூழ்நிலைக்குப் பங்களிப்புச் செய்கின்றார்கள்.

யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் மீளிணக்கம் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஓரளவு முன்னெடுப்புக்கள் இருந்து வருகின்றன. இதன் காரணமாக, மீளத்திரும்பி வருதல் மற்றும் நிர்மாணம் போன்ற செயன்முறைகள் கீழறுக்கப்படலாம். சிறுபான்மையாக இருக்கின்ற இடம்பெயர்ந்த சமுதாயத்தினர் வடக்கு மற்றும் கிழக்கிற்குத் திரும்பி வருவது அதிகரித்த அளவிற்குக் கடினமானதாக மாறியிருக்கின்றது. திரும்பி வரும் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்கள் இவர்களை புறத்தாராக நோக்க எத்தனிப்பதுடன் இம்மக்களின் காணிகளையும் வளங்களையும் பறிப்பதற்கும் முயற்சிக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசாங்கமும் சிவில் சமூக செயற்படுனர்களும் கருணையற்றவர்களாகவும் உதவி செய்யாதவர்களாகவும் இருக்கின்றனர். அபிவிருத்திக் கருத்திட்டங்கள் பொதுவாக ஒரு சமுதாயத்திற்கு உதவி வழங்குவதாகவும் மற்றைய சமுதாயத்தினை ஓரங்கட்டும் வகையிலானதாகவுமே வடிவமைக்கப்படுகின்றன. இது அவர்கள் இதே போன்ற கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அவர்களை நிர்ப்பந்திக்கின்றது. இதனால் வளங்கள் சமமின்றிப் பகிரப்படுவதுடன் வளங்கள் வீணாக்கவும்படுகின்றன. இது இனப்பிளவினை மேலும் வலுப்படுத்துகின்றது. இது தொடர்ந்தும் அரசினாலும் சர்வதேச மற்றும் தேசிய மனிதநேய அமைப்புக்களினாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது இனப் பாரபட்சங்களுக்கு துணை சேர்க்கும் செயற்பாடாக அமைகின்றது.

1990 ஒக்டோபரில் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பதிலளிப்பதற்காக “தமிழ் மக்களுக்கும் அவர்களின் சிவில் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்குமான வேண்டுகோள்” எனும் தலைப்பில் 71 தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளியிட்ட அண்மைய கூற்றானது மீளிணக்கச் செயன்முறையில் ஒரு முக்கியமான சமிக்ஞையாகும். கசப்பான கடந்த காலத்தை வெற்றி கொண்டு, கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு, மீளிணக்கத்தினை நோக்கிய புதிய பாதையினை உருவாக்குவதற்கு எடுக்கப்படும்; இந்த முயற்சிகள் தமிழ் முஸ்லிம் உறவினை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க முயற்சியாகும். முஸ்லிம்களை வெளியேற்றியமை எனும் ஈனத்தனமான செயலை ஏற்றுக் கொள்வதற்குக் கடந்த காலத்தில் தமிழ் தனிநபர்கள் மேற்கொண்ட முயற்சியிலிருந்து இம்முயற்சி கட்டமைக்கப்படுகின்றது. வெளியிடப்பட்ட இக் கூற்றானது வெளியேற்றப்பட்டமையினைக் கண்டித்து, இனி ஒரு போதும் இவ்வாறு நடக்காது எனக் குறிப்பிடுவதோடு மட்டுமல்லாது, இவ் வெளியேற்றமானது வட புல முஸ்லிம் சமுதாயத்தின் மீது ஏற்படுத்தியுள்ள நீண்ட கால வடுவினையும், இச் சமுதாயத்தினரின் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான தமிழ் சிவிலியன்களின் பொறுப்பினையும் எடுத்துக் கூறுகின்றது. அதிகாரப் பகிர்வு, சகல பிரசைகளுக்கும் சமமான உரிமைகள் மற்றும் மீளிணக்கம் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடலின் பரந்த செயன்முறைக்கும் அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் இம் முயற்சியினை வரவேற்கின்ற அதேவேளை, முஸ்லிம் சிவில் சமூகம் என்ற ரீதியில் நாம் எம்மைச் சுய பரிசோதனை செய்துகொள்வது எமது கடமையாகும். யுத்தத்தின் போது முஸ்லிம்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளை அடையாளம் காணச் செய்வதில் முஸ்லிம் சமுதாயம் பல சிரமங்களை எதிர்நோக்கியது. இலங்கை மக்களையும் கொள்கை வகுப்போரையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும் அடையாளம் காணச் செய்வதற்கும் முஸ்லிம்கள் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்ட பிரச்சினைகளில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கிழக்கிலும் வேறு இடங்களிலும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, பாரிய இடப் பெயர்வு, காணிகளை இழந்தமை, மனித உரிமை மீறல்கள், சமாதானப் பேச்சு வார்த்தைகளிலிருந்து முஸ்லிம்கள் விலக்கிவைக்கப்பட்டமை போன்ற பிரச்சினைகள்; சிலவாகும். எவ்வாறாயினும் எமது சொந்தக் கரிசனைகளை எழுப்புவதற்கு நாம் முயற்சிக்கையில், பாதிக்கப்பட்ட ஏனைய சமூகத்தினரின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் தவறிவிட்டோம். சில சந்தர்ப்பங்களில் எமது சுய நலக் கரிசனைகள் காரணமாகவும், அரசாங்கத்திற்கும் எல்ரிரிஈற்கும் சவால் விடுக்கும் பயம் காரணமாகவும் முஸ்லிம் சமுதாயத்தின் சில பகுதியினர் முகம் கொடுத்த பிரச்சினைகளையிட்டு நாம் மௌனம் காத்திருக்கின்றோம். அத்துடன், பிராந்தியம், வகுப்பு மற்றும் பால்நிலை தொடர்பான எமது பாகுபாடு மிகு எண்ணங்களும் இவ்வாறான மௌனத்திற்குத் தூண்டுகோலாயிருந்திருக்கின்றன. மோதலினாலும் யுத்தத்திற்கு முன் நிகழ்ந்த இனக் கலவரங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் யுத்தத்தினால் கொல்லப்பட்ட, அங்கவீனமான மற்றும் இடம்பெயர்ந்த மனிதர்களின் அவலங்களை எமது அவலங்களாக உணர்வதற்கும் நாம் தவறிவிட்டோம். யுத்தத்தினால் சகல சமுதாயங்களும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் சமுதாயங்கள் யத்தத்தினால் மிகக் கொடூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்வது எமது தலையாய கடமையாகும்.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை அங்கீகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை நாம் வரவேற்கின்றோம். இலங்கையிலே சமாதானத்தினையும் சனநாயகத்தினையும் வேர்பிடிக்கச் செய்வதற்கு டுடுசுஊ அறிக்கையானது பல பரிந்துரைகளை வழங்குகின்றது. இடம்பெயர்ந்தவர்கள் அவர்களின் சொந்த மண்ணிற்குத் திரும்புவதை வசதிப்படுத்துதல் முதற்கொண்டு தகவலுக்கான உரிமையினை அறிமுகப்படுத்துதல், அரசியல் தீர்வு பற்றிய கருத்தொருமிப்பினை ஏற்படுத்துதல், காணாமல் போதல் மற்றும் ஏனைய மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை நடத்துதல், மொழிக் கொள்கையினை அமுல்படுத்துதலை மேம்படுத்துதல் வரையான பல பிரச்சினைகளைத் தீர்த்தல் பற்றி அறிக்கை குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வு மற்றும் வகைப்பொறுப்பு சார்ந்த விடயங்களைப் பூர்த்தி செய்தல் தொடர்பாக கணிசமான இடைவெளிகள் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். இந்தக் குறைபாடுகள் அறிக்கையில் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அவற்றினைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தினைக் கோருகின்றோம். அத்துடன் LLRC பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும் நாம் அரசாங்கத்தினைக் கோருகின்றோம். இப்பரிந்துரைகள் தேசிய மட்ட மீளிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் சனநாயகத்திற்கும் பெரும் தாற்பரியங்களை ஏற்படுத்தக்கூடியவையாகும். பாராளுமன்றத்திற்கு பதில் கூறக்கூடிய, அமுல்படுத்தலைக் கண்காணிக்கின்ற பொறிமுறையினை உருவாக்குவதானது இது தொடர்பில் பயன்மிக்கதாகும்.

முஸ்லிம் சமுதாயத்தினைப் பொறுத்த வரை, அரசியல் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களை அங்கீகரிக்காமை உள்ளடங்கலாக முஸ்லிம்களை விலக்கிவைத்தலுக்கு எதிரான எமது வழமையான பதில் நடவடிக்கையான முறைப்பாடு செய்தலுக்கு அப்பால் நாம் நகர்ந்து செல்ல வேண்டும். உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர், மீள்குடியேற்றம், காணி, அரசியல் தீர்வு மற்றும் சக வாழ்வு உள்ளிட்ட பல்வேறுபட்ட யுத்தத்திற்குப் பின்னரான விடயங்கள் எவ்வாறு தீர்க்கப்படல் வேண்டும் என்பது பற்றிய கருத்தொருமிப்பினை நாம் வடிவமைக்கவேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் எமது சொந்த நிலைப்பாட்டினை வலுப்படுத்தும் அதே வேளை, ஏனைய சமூகங்களுடன் கருத்தொருமிப்பினை வளர்ப்பதற்கும் உதவும். எமது அரசியல் தலைவர்கள் இவற்றினைச் செய்யத் தவறியமையினால், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என்ற ரீதியிலும் அரசியல் செயற்படுனர்கள் என்ற ரீதியிலும் நாம் இச்சவாலை ஏற்று யதார்த்தத்தினைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதற்குத் திடசங்கற்பம் பூண வேண்டும். இவ்வாறு செய்யத் தவறுகின்றமை, இன ரீதியான அரசியலுக்கும் பாகுபாடு மிகு சமூக நடைமுறைகளுக்கும் மோதலைச் சதா நிலைக்க வைப்பதற்கும் தீனி போடுவதாக அமைந்து விடும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எமது எதிர்வினையற்ற நிலைப்பாட்டினால், மோதலைத் தீர்ப்பதற்கும் பன்மை வாதம், சனநாயகம் மற்றும் நீதி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலான ஒரு புதிய இலங்கையினைக் கட்டியெழுப்புவதற்குமான ஒரு வரலாற்று வாய்ப்பினை நாம் இழந்து விடுவோம்.

புறக்குறிப்பு:
2009 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வன்னியிலிருந்தும் மட்டக்களப்பு மேற்கிலிருந்தும் இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவினை வழங்கியமை, 2007ல் சுனாமியினால் பாதிக்கப்பட்ட சகல சமூகத்தினருக்கும் மனிதநேய உதவிகளை வழங்கியமை போன்ற மனிதனேய முன்னெடுப்புக்களில் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஈடுபட்டனர் என்பதையும் பாதிப்புக்களை ஏற்படுத்திய சம்பவங்கள் நிகழ்ந்தபோது அதனைக் கண்டிப்பதற்கான கூட்டு முயற்சியின் பங்காளர்களாக இருந்து அவ்வாறான செயல்களுக்குப் பரிகாரம் காணுவதில் முன்னிற்போராகவும் இருந்தனர் என்பதையும் இங்கே குறிப்பிடுவது முக்கியமானதாகும்.

LIST OF SIGNATORIES
1) Ms. Azra Abdul Cader Colombo
2) Mr M. Abdul Cader Mohideen Jummah Mosque, Puthukudiyiruppu
3) Mr. K.A.M. Aboobaker Federation of All Farmers Societies, Muttur
4) Mr. A.C. Aboobucker Mohideen Jummah Mosque, Konarpannai
5) Mr. M. Ahamed Naina Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
6) Mr. Hilmy Ahmed
7) Mr. Shifan Ahmed Colombo
8) Mr. M.H.M. Ajmeer Matale
9) Ms. M.S. Ajmiya PMA, Sammanthurai
10) Mr R.M. Ali Khan Husainiya Jummah Mosque, Tharapuram
11) Mr. M.A.C.M. Ameen Hira Islamic Reawakening Academy
12) Mr. H. Ameer Ali
13) Ms. M. Anitha Palavi Women Development Society
14) Mr. A.S. Anoordeen
15) Mr. F.M.S. Ansar Moulana Maruthamunai
16) Mr. M.S. Anver Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
17) Mr. S.A. Ashar Mohideen Jummah Mosque, Konarpannai
18) Ms. U.L.F. Ashriffa PMA, Sainthamaruthu
19) Mr. S.H. Ashroff Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
20) Mr. K.M. Asker All Fishermen’s Federation, Muttur
21) Mr. A.H.M. Aroos Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
22) Ms. L. Arushiya Women Development Society, Kalpitiya
23) Ms. A. Asvina Sammanthurai
24) Mr. Y.A. Athuham Husainiya Jummah Mosque, Tharapuram
25) Dr. U.L.A. Azeez Justice of Peace, Maruthamunai
26) Mr. S.M. Azhar Husainiya Jummah Mosque, Tharapuram
27)Mr. A.G.A. Azeem Husainiya Jummah Mosque, Tharapuram
28) Mr. A.W. Badurdeen Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
29) Ms. S.F. Beham Women’s Action Network, Trincomalee
30) Ms. M.B.F. Bisliya Jaffna Civil Society for Equality
31) Ms. M.A.B. Bisriya Muslim Women’s Development Trust, Puttalum
32) Mr. A.H.M. Buhary Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
33) Mr. A.M. Fahim Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
34) Mr. S.M. Faizal Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
35) Mr. A.C.M. Faleel Sainthamaruthu
36) Mr. S.A.C.M. Fareed Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
37) Ms. A. Fareeda Federation of Women’s Societies, Muttur
38) Moulavi A.A.M. Farzath Oluvil
39) Ms. Saadiqa Fauz
40) Mr. A.S.M. Firthows Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
41) Mr. A.R. Furhamdeen Husainiya Jummah Mosque, Tharapuram
42) Mr. M.S. Gazzali
43) Mr. Sajahan Hameed Board of Trustee Thanneeruthu Mosque
44) Ms. Sharmila Haneefa Jaffna Civil Society for Equality
45) Ms. Anberiya Hanifa Muslim Women’s Research Action Forum
46) Mr. M.M. Hanifa Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
47) Dr. Farzana Haniffa University of Colombo
48) Ms. Rishana Haniffa Colombo
49) Mr. A.B.M. Hasmin Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
50) Mr. N.M. Hassan Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
51) Mr. A.H.M. Hilmy Maruthamunai
52) Mr. M.A.A.Husain Mullaitivu District Youth Development Federation
53) Ms. Rifla Husain Women’s Action Network
54) Mr. S.M.S Hussain Addalachenai
55) Mr. M.Y.M. Ieyas Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
56)Mr. M.I. Illiyas Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
57)Mr. M.C.M. Iqbal
58)Dr. Zulfika Ismail
59) Ms. Jezima Ismail Muslim Women’s Research and Action Forum
60) Mr. A.C. Iyoob Mohideen Jummah Mosque, Puthukudiyiruppu
61) Mr. Ameen Izzadeen
62) Mr. M.T. Jaber Ali Malikaikadu
63) Mr. A.R.A. Jahan Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
64) Mr. M. Jahubar Mohideen Jummah Mosque, Puthukudiyiruppu
65) Ms. M.S. Jaleel MWRAF, Maruthamunai
66) Mr. S.H.M. Jameel
67) Mr. A. Jameel Natpiddimunai
68) Mr. S. Jamoon Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
69) Mr. M.I.M. Jawath Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
70) Mr. A.W.M. Jihad People’s Forum, Muttur
71) Mr. M. Jusli Alangkuda Mosque Trustee
72) Mr. M.M. Kajoon Husainiya Jummah Mosque, Tharapuram
73) Mr. M.M. Kamal Husainiya Jummah Mosque, Tharapuram
74) Moulavi M. M. Kareem Masjid Al – Shurah Council Muttur
75) Moulavi K. M. Karees President, Jamiyyathul Ulama, Muttur
76) Mr. Abdul Kayoom Batticaloa
77) Mr. V.M. Khalideen All Mosque Federation Muttur
78) Mr. A.M. Lafeer
79) Mr. M. Liyakath Ali SELSS, Ninthavur
80) Dr. M. Mahees University of Colombo
81) Ms. Jensila Majeed Women’s Action Network
82) Ms. Jeslina Majeed Mullaitheevu Women’s Development and Rehabilitation Federation
83) Mr. M.I.M. Mansoor CELSS, Ninthavur
84) Mr. N. Misjath Erukkalampiddi Welfare Association for Renaissance Development & Sports
85) Mr. A.C. Mohammed Sainthamaruthu
86) Mr. Baheej Mohideen Akkaraipattu
87) Ms. Juweriya mohideen Muslim Women’s Development Trust, Puttalum
88) Mr. M.I.M. Mohideen
89) Mr. A.S.M. Mowjood Kalmunai
90) Mr. Mohamed Mubarak
91) Ms. Rameeza Mubarak Changers Foundation, Batticaloa
92) Ms. S. Mubeetha Puthukudiruppu Women Development Society
93) Mr. K.M. Abdhul Muhaimin Organisation for Rural Education and Cultural Services
94) Mr. A.S.M. Mujahith
95) Mr. N.M.A. Munaf Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
96) Mr. A.G.M. Munaffar Husainiya Jummah Mosque, Tharapuram
97) Mr. A.C. Musathide Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
98) Mr. M.N. Mushafque
99) Mr. S.H.A. Muthalifu Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
100) Mr. M.S.M. Naleer Sainthamaruthu
101) Mr. A.R. Naleer Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
102) Mr. S.A.C. Naseer Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
103) Mr. M.R.M. Nawfeel Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
104) Mr. A.H.M. Nawfer Kalmunai
105) Mr. M.S. Nazaar Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
106) Mr. M.A.M. Nazeer Kalmunai
107) Mr. Faleel Mohamad Nifraj
108) Ms. J. Nihara Erukkalampiddi Women’s Society
109) Moulavi S. H. Nizar Katheeb’s Federation Muttur
110) Mr. A. Niyas Mohideen Jummah Mosque, Puthukudiyiruppu
111) Dr. M.A. Nuhuman
112) Mr. S.M. Nuhuman Husainiya Jummah Mosque, Tharapuram
113)Mr M.H.A. Raheem Mullaitivu District Displaced Social Service Organisation
114) Mr. Mirak Raheem Colombo
115) Mr. P.N.M. Rahman Mussali
116) Mr. M. Rahmathulla Puttalam
117) Mr. M. Ranoos Vethatheevu Resettlement and Development Society
118) Mr. A.S. Mohammed Rayees Mannar
119) Mr. A.N. Riyas Husainiya Jummah Mosque, Tharapuram
120) Mr. M.R.M. Riyas Kandy
121) Mr. J. Rizard Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
122) Mr. A.R.M. Rizwi Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
123)Mr. A.C.M. Rumaiz Puttalam
124) Mr. A.S.M. Safrin Northern Muslims Students’ Organisation
125) Mr. A.C. Sajahan Mohideen Jummah Mosque, Konarpannai
126) Mr. M.N.M. Sarjah Oluvil
127) Mr. A.C. Sathar Mohideen Jummah Mosque, Konarpannai
128) Ms. Shreen Abdul Saroor Mannar Women’s Development Federation
129) Mr. S.S. Seinulabdeen Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
130) Mr. A.L. Subuhan Jaffna Muslim Development Committee
131) Ms. A.L. Tahgiva Mediation Board, Sammanthurai
132) Ms. Minna Thaheer Colombo
133) Mr. M.I.M. Tharjoon
134) Moulavi A.S.H. Thasreeq Arafa Nagar Resettlement Society
135) Mr. M.M. Umar Saibo Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
136) Mr. M.M. Uthuman Lebbe Sainthamaruthu
137) Ms. Hafsa Uvais Colombo
138) Mr. M. Uvais All Ceylon Moors Association
139) Mr. A.S.M. Uvais Karume Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
140) Mr. M.A.M. Washasdeen SESSO, Oluvil
141) Mr. M.H.M. Wazeen Sainthamaruthu
142) Mr. N. Yaseer Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
143) Mr S.A. Yasser Mohideen Jummah Mosque, Konarpannai
144) Mr. A. Yoonus Mohideen Jummah Mosque, Puthukudiyiruppu
145) Ms. Faizun Zackariya Muslim Women’s Research and Action Forum
146) Ms. Hazeera Zavahir Kandy
147) Ms. G.M.R.Zeena Sainthamaruthu

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply