இலங்கைக்கு எதிராகப் பிரேரணை முன்வைத்தால் முறியடிக்க நடவடிக்கை

ஜெனீவாவில் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டவர முயற்சிக்கப்படும் பிரேரணையை முறியடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழுவினர் இவ்வார இறுதி யில் ஜெனீவா செல்லவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சு என்ற ரீதியில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவர முயற்சிக்கப்படும் பிரேரணையை முறியடிப்பதற்கான முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். இந்த முயற்சிகளை முறியடிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் தொடர்பில் தேசிய, சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரங்களைப் முறியடிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை,

இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளடங்கலாக 51 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவொன்று அடுத்தவாரம் ஜெனீவா செல்லவுள்ளது. இந்தக் குழுவினர் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கையின் நிலைமைகளை விளக்கிக் கூறுவார்கள் என்றும் தெரியவருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply