மாலைதீவின் நிலையினை இலங்கையில் ஏற்படுத்த மேற்குலகம் முயற்சி

மாலைதீவில் ஏற்பட்டுள்ள நிலையினை இலங்கையிலும் ஏற்படுத்த மேற்குலகம் சதி செய்து வருவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்

இலங்கையிலும் மாலைதீவின் நிலையினை ஏற்படுத்திவிடலாம் என மேற்குலகம் நினைக்கின்றது இது ஒரு போதும் நடைபெறாது இது மேற்குலகின் பகல்கனவாகவே இருக்க முடியும். இதனை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அமெரிக்கா போரில் ஈடுபட்ட இராணுவத்திற்கு தண்டனை வழங்க முயற்சிக்கின்றது . எமது இராணுவத்திற்கு தண்டனை வழங்க அமெரிக்காவே அல்லது வேறு எந்த ஒரு நாட்டாலும் தண்டணை வழங்க முடியாது

பிராந்திய நாடுகள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை தீர்பதற்கு பிராந்திய நாடுளை கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும் எந்த ஒரு சந்தர்பத்திலும் எமது இராணுவ வீரர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த முடியாது இதனை எமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது.

சர்வதேச சக்திகள் இலங்கைக்கு எதிராக பல தடவைகள் செயற்பட்டுள்ள. இன்றும் செயற்பட்டு வருகின்றன. இதனை முறியடிக்க பிராந்திய நாடுகளின் ஒன்றினைவு அவசியம்.

அரசாங்கத்தினையும் இராணுவத்தினையும் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமையாகும். அரசாங்கத்திற்கு எதிராக ஆர்பாட்டங்களில் ஈடுபடுவதை விட அமெரிக்க தூதரகம் முன்பாக மக்கள் போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும் இது நாட்டு மக்களின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply