ஜனநாயக நெறிகளுக்கு அமைந்த போராட்டங்களுக்கு தடையில்லை
இலங்கையில் ஜனநாயக ரீதியாக நடத்தப்படும் போராட்டங்கள் தடுக்கப்படவில்லை. எந்தவொரு தரப்பினரும் ஜனநாயக நெறிகளுக்கு அமையவே போராட்டங்களை நடத்த வேண்டும். சட்ட மீறல்களில் ஈடுபடுவதனை அனுமதிக்க முடியாது.
எந்தவொரு போராட்டத்தையும் தடுத்து நிறுத்த பாதுகாப்புத் தரப்பினர் முயற்சிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியோ, ஜே.வி.பியோ அல்லது வேறும் அரசியல் கட்சியோ ஜனநாயக ரீதியில் நடத்தும் போராட்டங்களை பொலிஸார் தடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், போராட்டம் நடத்துவோர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் மோதும் நோக்கில் செயற்படுகின்றனர். கொழும்பு கோட்டே ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போது, அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என பொலிஸாருக்கு உத்தரவிட்டேன்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரி மாளிகை நோக்கிச் செல்ல முற்பட்ட போது பொலிஸார் அவர்களை தடுத்தனர். பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே பொலிஸாரின் முதன்மைக் கடமையாகும் போராட்டங்களை தடுக்கும் அவசியம் கிடையாது. எனினும், எந்தவொரு நடவடிக்கைக்கும் ஓர் எல்லையுண்டு. எல்லை மீறிச் செயற்படும் போது அதனை தடுக்க வேண்டியது எமது கடமையாகும்.
சிலாபம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படும். பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய பல சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்ட முடியும்.
பாரிய தியாகங்களுக்கு மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். மீண்டும் நாட்டை பின்நோக்கி நகர்த்த அனுமதியளிக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply