இலங்கைக்கெதிரான செயற்பாடுகளை தடுப்பதில் வெற்றி பெறுவோம்

மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் மூன்று இலட்சம் மக்களைப் பாதுகாப்பதில் நாம் வெற்றி கண்டது போல் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் அழுத்தங்களுடன் முன்னெடுக்கப்படும் இலங்கைக்கெதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி வெற்றிபெறுவது உறுதியென அமைச்சர் டியூ குணசேகர நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ் மக்களைப் பாதுகாப்பதிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் அரசாங்கம் எடுத்துவரும் முன்னேற்றகரமான நடவடிக்கையைப் போன்றே மனிதாபிமான யுத்தத்தின் போது படையினரால் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கென விசேட ஆணைக் குழு வொன்றை நியமித்து செயற்படுத்தியுள்ள துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப் படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.

இத்தகைய நிலையில் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் வேறு எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளோ அமைப்புகளோ மேற்கொள்ளும் எத்தகைய எதிர்ப்புகளையும் அரசாங்கம் வெற்றிகரமாக முறியடிக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 19வது அமர்வு எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாவதுடன் இம்முறை அமர்வில் இலங்கைக்கு எதிரான குற் றச்சாட்டுக்களை முன்வைப்பதில் அமெரி க்கா உட்பட பல சர்வதேச நாடுகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் டியூ குணசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

ருவண்டா போன்ற ஏனைய யுத்தம் நடைபெற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை யுத்தம் என்ற சொல்லுக்குக் கூட பொருத்தமில்லாத மனிதாபிமான நடவடிக்கையையே மேற்கொண்டுள்ளது.

மனிதாபிமான நடவடிக்கைகள் இடம் பெற்ற காலத்தில் ஐ.நா. தமது படைகளை அதற்குள் உட்படுத்தவோ அல்லது அதன் விருப்பதிற்குச் செயற்பட இலங்கை இடமளிக்காததன் எதிரொலியாகவே தற்போது நெருக்கடிகளை கொண்டு வரமுனைகிறது.

அரசாங்கமானது பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதிலும் அவர்களுக்குப் புனர்வாழ்வளிப்ப திலும்அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டுள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து மூன்று இலட்சம் மக்களைப் பாது காப்பதென்பது எளிதான விடயமல்ல. மனிதாபிமான நடவடிக்கைகளில் பாரிய ஆயுதங்கள் எதனையும் உபயோகப்படுத்தக் கூடாதென்று அரசாங்கம் கண்டிப்பான அறிவுறுத்தலைப் படையினருக்கு வழங்கி யிருந்தது. அதனையே படையினருக்கும் கடைப்பிடித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply