ஆர்ப்பாட்டங்களின் போது அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அத்துமீறுவதை தவிர்த்துக் கொள்க: பிரதிப் பொலிஸ் மா அதிபர்

கொழும்பிலுள்ள எந்தவொரு பிரதேசங்களில் எவ்வாறான ஆர்ப்பாட்டங்களை செய்தாலும் பரவாயில்லை. ஆனால், அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைவதையோ, அதற்குள் ஆர்ப்பாட் டங்களை செய்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க வேண்டுகோள் விடுக்கின்றார்.

அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைவதையோ, ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதையோ, பொறுப்புவாய்ந்த வர்கள் என்ற அடிப்படையில் பொலிஸார் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் அநீதியான முறையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாளிகாவத்தையில் 15 ஆம் திகதி ஜே. வி. பியும், கொழும்புகோட்டையில் 17 ஆம் திகதி ஐ. தே. கவும் செய்த ஆர்ப்பாட்டத்தின் உண்மை நிலைவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கொழும்பு மத்திய பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெகார்த்தி பெரேரா, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன ஆகியோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் விபரிக்கையில் :-

எந்த ஒரு ஆர்ப்பாட்டங்களை செய்ய சகலருக்கும் அதிகாரமுண்டு. அவற்றை பொலிஸார் ஒருபோதும் தடுக்க மாட்டார்கள். ஆனால் அது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்க வேண்டும்.

2011 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலம் கொழும்பு பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றை பொலிஸாராகிய நாங்கள் ஒரு போதும் தடுத்து நிறுத்தவில்லை. சகல ஆர்ப்பாட்டத்திற்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். எனினும் ஜே. வி. பி, மற்றும் ஐ. தே. கவினால் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தேவையை கருத்திற் கொண்டே குறைந்தளவு பலத்தை பயன்படுத்த வேண்டியிருந்தது.

ஜே. வி. பிக்கு மாளிகாவத்தையிலிருந்து மருதானை வரை ஊர்வலமாக வர அனுமதி வழங்கினோம். ஆனால் கொழும்பு கோடடையில் அந்த சமயம் வேறொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததாலேயே எம்மால் ஜே. வி.பியை அனுமதிக்க முடியாமல் போனது.

இதேபோன்று ஐ. தே. க, 17 ஆம் திகதி 3.00 மணிமுதல் 4.30 மணி வரை ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டது. அதனை நாங்கள் தடுக்கவில்லை. அவர்கள், புகையிரத நிலையத்திற்கு முன் இருந்த ஜனாதிபதி அவர்களின் கட்அவுட்டை உடைத்தனர்.

தீவைத்தனர். அப்போது நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்கும் ஊர்வலமாக வந்து ஊடுருவ முற்பட்டனர். அதனை பேச்சுவார்த்தைதமூலம் தடுக்க முற்பட்டோம், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் தண்ணீர் பிரயோகம் செய்தோம். அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர் கற்களால் எறிந்ததனை அடுத்தே கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டோம்.

அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாகும். அதற்குள் நுழைய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த பிரதேசத்தை நோக்கி ஊருவலமாக வரமுற்பட்டதாலேயே தடுக்கும் நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்கார்களின் தாக்குதல்களில் 15 பொலிஸார் காயமடைந்தனர். எந்த ஒரு ஆர்ப்பாட்டக்காரரும் இந்தச் சம்பவத்தில் காயமடையவில்லை. நாங்கள் பொல்லடியும் நடத்தவில்ல¨ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply