ஜெனீவா பயணம் குறித்து கூட்டமைப்பு நாளை தீர்மானிக்கும்
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வது உறுதி என்றபோதிலும், கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி யார் யார் செல்வது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடர் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை (23) இறுதி முடிவு எடுக்கவுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதோடு ஜெனீவாவில் தமது செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பு விரிவாகக் கலந்துரையாடவுள்ளது.
சர்வதேச சமூகம் இலங்கைக்கு பாரிய அழுத்தங்களை கொடுத்துவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று (21) ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply