இலங்கைத் தமிழர் பிரச்சினை: தமிழக முதல்வருடன் முக்கிய கட்சிகள் இன்று அவசரக் கூட்டம்

இலங்கையின் வடக்கில் இடம் பெறும் யுத்தத்தை உடனடியாக நிறுத்துவதற்கு மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடம் இன்று  வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.கருணாநிதியை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் இன்று சந்தித்த போதே இந்த வேண்டுகோளை விடுத்தனர்.

தமிழக முதல்வருடனான இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இந்தச் சந்திப்புக் குறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த ராமதாஸ், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக முதல்வரிடம் அறிக்கையொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருடன் பேசுவதாக தமிழக முதல்வர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply