ஐக்கிய தேசிய கட்சி புதிய வியாக்கியானம்

ஜெனீவா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படுவது தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணையே அன்றி, இலங்கைக்கு எதிரான பிரேரணை அல்லவென ஐக்கிய தேசிய கட்சி புதிய வியாக்கியானம் செய்துள்ளது.

கண்டி அக்குன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இங்கு பிரேரணை தாக்கல் செய்யப்படவில்லை.

2005ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு இறுதியுத்தம் நடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே மனிதவுரிமைகள் ஆணைக்குழு ஆராய்கிறது.. எனவே, இது தற்போதைய அரசாங்கத்தின் மீதான நடவடிக்கையாகவே அமைகிறது என்று லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

மனிதவுரிமைகள் பேரவையில் பிரேரணையை தாக்கல் செய்பவர்கள் பல கோரிக்கைகளை முன்வைதுள்ளனர். இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்படுவதை தவிர்க்க வேண்டும், ஊடகவியலாளர்கள், தாக்கப்படுவதையும், படுகொலை செய்யற்படுவதையும் நிறுத்த வேண்டும், ஊடக சுதந்திரம் பாதுகாக்க வேண்டும்.

அத்துடன், சுயாதீன ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும். இதுதவிர, வெள்ளைவேன் சம்பிரதாயத்தை நிறுத்த வேண்டும் என்றும் பல வலியுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply