மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கான தேசிய பொறிமுறை அவசியம்
பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை தணிப்பதற்காக, மனித உரிமைகள் விவகாரத்தை கையாள்வதற்கு தேசிய பொறிமுறையொன்று அவசியம் என ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.
பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை இலங்கையால் முடிவுக்கு கொண்டுவர முடியுமா என கேட்டபோதே தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2007 முதல் 2009 ஆம் ஆண்டுவரை ஜெனீவாவில் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பதவி வகித்த கலாநிதி தயான் ஜயதிலக்க தற்போது பிரான்ஸுக்கான இலங்கையின் தூதுவராகவும் யுனெஸ்கோவுக்கான நிரந்திர பிரதிநிதியாகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
‘மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக வலிமையான, நம்பகமான, சுயாதீனமான, முழுமையாக இயங்கும் தேசிய பொறிமுறையொன்றின் மூலம் மாத்திரமே பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முடிவுக்கு கொண்டுவர முடியும்’ என அவர் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பழிவாங்கும் மனப்பாங்குடையவர் அல்லர் எனவும் அவர் ஒரு மனித உரிமை அடிப்படைவாதி எனவும் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply