ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருந்தால் இலங்கைக்கு பாதகமான சூழலை உருவாக்கும்

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகள் நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருந்தால் இலங்கைக்கு பாதகமான சூழலை உருவாக்கும்.

இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிராக ஆசிய நாடுகள் பல தமது வாக்கினைப் பதிவு செய்யும் என இலங்கையின் சட்ட வல்லுனர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரஷ்யாவின் ஆதரவு இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமையும் என சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தாயஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகள் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருந்தால் அது இலங்கைக்கு பாதகமான சூழலை உருவாக்கும் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த நாடுகள் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தமது வாக்குகளை பதிவு செய்யும் பட்சத்தில் இலங்கை எதிர்நோக்கும் அழுத்தங்கள் குறைவடையும் என சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தங்கள் காரணமாக சில நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது இலங்கைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply