கடனை அடைப்பதற்கு மேலும் கடன்
அபிவிருத்தி பிணைப் பத்திரங்கள் மூலம் மேலும் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வருடம் மேலதிக கடனாக பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திரட்டப்படவுள்ள நிதியானது கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட கடன்களை மீள செலுத்தவும், அவற்றுக்கான வட்டியை செலுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளது.
பெப்ரவரி 8 ஆம் திகதி அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. இந்த அனுமதி தற்போது மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி சார் அமைப்புகள் இந்த கடன் பெறுகையை முற்றிலும் முறையற்ற செயற்பாடு என அறிவித்துள்ள நிலையில் அரச தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்து, இந்த கடன் வரையறைகளுக்கு அமைவாகவே பெற்றுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply