எதிரணிகளின் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்ற கூட்டமைப்பு தீர்மானம்
அரசாங்கத்துக்கு எதிராக பொது எதிரணியின் போராட்டத்தில் பங்குபற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் இது தொடர்பாக டெய்லி மிரர் கேட்டபோது, பொது எதிரணிகளின் போராட்டத்தில் பங்குபற்ற தமது கட்சி தீர்மானித்திருப்பதாக உறுதிப்படுத்தினார். நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமது கட்சி பங்குபற்றும் எனவும் அவர் கூறினார்.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்திற்காக பொது அணியொன்றை அமைப்பதற்காக ஜே.வி.பியுடன் ஐ.தே.க. உத்தியோகபூர்வமற்ற மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த யோசனைக்கு சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் பாணந்துறையில் நாளை நடைபெறவுள்ள கூட்டு எதிரணி ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி பங்குபற்றும் என எதிர்பார்ப்பதாகவும் மங்கள சமரவீர கூறினார்.
இதேவேளை இப்பொது முன்னணியானது ஒரு தேர்தல் கூட்டணி அல்ல எனவும் இது ஊழல், மனித உரிமை மீறல்கள், வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்திற்கான அமைப்பு எனவும் மங்கள சமரவீர கூறினார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply