போலி ஆவணங்கள் தயாரித்த இருவர் வவுனியாவில் கைது
இராணுவ உத்தியோகபூர்வ முத்திரைகளை போலியாக தயாரித்து, இராணுவ முகாம்களுக்கு விசாரணைக்கு வர வேண்டும் என தற்போது வெளிநாட்டில் வசிக்கும் வவுனியாவைச் சேர்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பிய குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக்கடிதங்கள் வெளிநாடுகளிலுள்ள நபர்களால் அரசியல் தஞ்சம் கோருவதற்கு பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ முகாம்களுக்குள் மக்கள் துன்புறுத்தப்படுவதாகவும் மீண்டும் இலங்கைக்கு வர வேண்டாம் எனவும் கூறும் கடிதங்களையும் மேற்படி சந்தேக நபர்கள் அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜோஸப் கேம்ப், கண்டி வீதி, வவுனியா எனும் முகவரியில் வசித்தவர்களுக்கே இக்கடிதங்கள் அனுப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் வவுனியா தெற்கு மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் பணியாற்றியவர்களாவர். இவர்கள் இன்று வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப் பட்டனர்.
வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் அரச படைகளினால் துன்புறுத்தப்படுவதாக கூறி நாட்டின் மதிப்புக்கு சர்வதேச ரீதியில் பங்கம் ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply