காலத்தை நழுவ விட்டுள்ளது இலங்கை
இலங்கை தனக்கான காலத்தை நழுவ விட்டுள்ளதாக அமெரிக்காவின் பொதுமக்கள் காப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான செயலர் மரியா ஒட்ரோ சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் இலங்கை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக்க கட்டப் போர் நிறைவுற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது இலங்கை உடனடியாக ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயலில் கொண்டுவர வேண்டும் எனவும் மரியே தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply