மீனவர்களுக்கான மானியங்கள் அதிகரிப்பு

மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக 100 லீற்றர் எரிபொருளை மேலதிக மானியமாக வழங்கவும், மீனவர்களுக்கு நிர்ணய விலையைப் பெற்றுக் கொடுக்கவும் ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், மீனவ சமூக பிரதிநிதிக ளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது இதனை அறிவித்த ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பணிப்புரைகளை விடுத்தார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோளுக் கிணங்க நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேச மீனவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின்போது நீர்கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான கத் தோலிக்க குருவானவர்கள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் வேண்டுகோளை செவி மடுத்து, சம்பந்தப்பட்ட பிரதேச மீனவ பிரதிநிதிகளை அலரிமாளிகைக்கு அழைப் பதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி செய்திருந்தார்.

இப்பேச்சுவார்த்தையின்போது எரி பொருள் விலையேற்றம் காரணமாக கடற்றொழிலாளர் சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை மேற்படி பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தினர். ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கும், சிறிய ரக மீன்பிடிப் படகுகளுக்கும், வெளி யிணைப்பு மீன்பிடி படகுகளுக்கும் மானியமாக 100 லீற்றர் எரிபொருளை மேலதிகமாக வழங்குவதற்குத் தீர்மானிக் கப்பட்டது. அதேவேளை, கடற்றொழிலில் ஈடுபடுவோரின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மீன்களை அரசாங்கத்தின் மூலம் கொள் வனவு செய்ய முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதால் மானியம் வழங்குவதன் மூலம் அரசாங்கம் அதற்கு நடுநிலை வகிக்க முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மீன்பிடிக் கைத்தொழிலுக்கு மட்டுமன்றி கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கும் அரசாங்கம் மானியம் வழங்குவதாகவும், டீசல் ஒரு லீற்றருக்கு 4ரூபா 79 சதமும், பெற்றோல் ஒரு லீற்றருக்காக 1ரூபா 90 சதமும் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டாலும் அரசாங்கம் மண்ணெண் ணைய்க்காக 80 வீதத்தையும், டீசலுக்காக 40 வீதத்தையும் மானியமாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் மீன்பிடி வலைகளுக்கு வரிவிலக்கும், மீன்பிடி உபகரணங்களுக்கு சலுகைகளை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் அது தொடர்பான சட்டதிட்டங்களை முறைப் படி அமுல்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரைத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அதேவேளை, நாட்டுக்கு மீன் இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நாடளாவிய ரீதியிலுள்ள சகல மீனவர்களுக்கும் இந்த மானியங்கள் பெற்றுக்கொடுக்கப் படும் என்றும் கூறினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன, சகல மீன வர்களினதும் வருமானவரி நீக்கப்பட்டுள்ளது எனவும், மீனவர்களினது கடனுக்கான வட்டி 4 வீதத்தையும், அதேவேளை வடமாகாண மீனவர்களின் கடன்வட்டி 25 வீதத்தையும் அரசாங்கம் வழங்குகின்றது எனவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், நீர்கொழும்பு, சிலாபம் பிராந்திய கத்தோலிக்க மதகுருமார்கள், அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதியமைச்சர்களான சரத்குமார குண ரட்ன, நியோமால் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மேல் மாகாண கடற்றொழில் அமைச்சர் சனத் நிஷாந்த, நிதியமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply