பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியில் கூட்டமைப்பு பக்குவமாக கையாளும்
அமெரிக்கா, இந்தியா போன்ற முக்கியமான நாடுகளை உள்ளடக்கிய 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பக்குவமாக கையாளும் என இரா.சம்பந்தன் தமிழ்மிரருக்கு கூறினார்.
இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஜெனிவா செல்வது தொடர்பில் என்ன தீர்மானத்தினை எடுத்தீர்கள் என்று கேட்டபோதே அவர் மேற்படி கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
‘ஊடகங்கள் செய்திகளை சரியாக புரிந்து வெளியிடவேண்டும். அதனால்தான் எமது சந்திப்பு பற்றிய சிறிய ஊடக அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தயவுசெய்து அதனை மட்டும் பிரசுரித்தால் போதுமானதாகும். பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியில் நாங்கள் அணுகிவருகிறோம். ஜெனிவாவில் அமெரிக்கா, இந்தியா உட்பட 47 முக்கிய நாடுகள் ஒன்று கூடியிருக்கின்றன. ஆகையினால் எமது கருமங்களை பக்குவமான முறையில் முன்னெடுத்து வருகிறோம்’ என்று கூறினார்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடர் சம்பந்தமாக நீண்ட கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
ஜ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் நடைபெறும் அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கின்ற அதேவேளை, தமிழ் மக்களின் நலன் சார்ந்த சகல நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது தமது நம்பிக்கையை பேணுமாறு எமது மக்களை கேட்டுக்கொள்ளுகிறோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply