ஆறு மாதத்துக்குள் அரசியல் தீர்வு

அரசியல் தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தனது அறிக்கையை 6 மாதங்களில் சமர்ப்பிக்கும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று ஜெனீவாவில் தெரிவித்தார்.

ஜெனீவாவுக்குச் சென்றுள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர், புலம்பெயர்ந்த தமிழர்கள், ஜெனீவாவிலுள்ள தூதரகங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று ஜெனீவாவில் நடைபெற்றபோது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை அரசாங்கம் துண்டித்துக்கொண்டது ஏன்? என உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதியான சுரேன் சுரேந்திரன் கேள்வி எழுப்பியபோது , அரசியல் தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அங்கத்தவர்களை நியமித்தவுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் தான் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
“இத்தெரிவுக்குழுவின் காலம் தொடர்பாகவும் நாம் கலந்துரையாடினோம். இது ஒரு கால வரையறையான முயற்சி. நாம் ஆறுமாதங்களில் அறிக்கை சமர்ப்பிப்போம்” என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply