இலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் மிசேல் ஜே. சிசன்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் கொழும்பிலிருந்து மாற்றலாகிச் செல்லவுள்ளார். மாற்றலாகிச் செல்லும் புரெனிசுக்குப் பதிலாக மிசேல் ஜே. சிசன் கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
சிசனை இலங்கைக்கு புதிய தூதுவராக நியமிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவித்தலை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பியுள்ளது.
இதனை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்த பின்னர் சிசன் கொழும்புக்கான தூதுவராக நியமிக்கப்படுவார்.
அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான மிசேல் ஜே. சிசன் முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாதில் அமெரிக்க துணைத் தூதுவராகவும், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்கத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் சென்னையில் 1996 தொடக்கம் 99 வரையிலும், இஸ்லாமாபாத்தில் 1999 தொடக்கம் 2000 வரையிலும் இவர் தூதரக பொறுப்பதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
அதைவிட ஐவரிகோஸ்ட், கெமரூன், பெனின், டோகோ, ஹெய்ற்றி ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுடனான உறவுகள் குறித்த கொள்கைகளை தீர்மானிக்கும் இராஜாங்கத் திணைக்களதின் தெற்காசிய விவகாரப் பிரிவில் முதன்மை பிரதி உதவிச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply