யாழ். புகையிரதப் பாதையமைக்கும் பணிகள் துரிதம்
வட பகுதிக்கான புகையிரத பாதையை புனரமைக்கும் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் காரணமாக வட பகுதிக்கான புகையிரத பாதைகள் முற்றாகவே அழிவடைந்துள்ளன. இதனை மீளவும் புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் புகையிரத பாதை தற்போது ஓமந்தை வரை புனரமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்த அடுத்த கட்ட புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாங்குளம், முறிகண்டி, கொக்காவில், கிளிநொச்சி, பரந்தன் மற்றும் ஆனையிறவு ஆகிய இடங்களில் பெருந்தொகையான தண்டவாளங்கள் புனரமைப்புக்காக நூற்றுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply