பெப்ரவரியில் பணவீக்கம் 2.7 சதவீதமாக வீழ்ச்சி

தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் கணிக்கப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2012 ஜனவரியில் 3.8 சதவீதத்திலிருந்து பெப்ரவரியில் 2.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 2010 ஜனவரிக்குப் பின்னர் காணப்பட்ட மிகக் குறைந்த வீதமாகும். ஆண்டுச் சராசரிப் பணவீக்கமும் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக முன்னைய மாதத்தின் 6.5 சதவீதத்திலிருந்து பெப்ரவரியில் 6.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்ததாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமும் 2012 ஜனவரியின் ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் 6.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மையப் பணவீக்கம் 2012 பெப்ரவரியில் 4.7 சதவீதமாகக் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுட்டெண்ணினால் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு 2012 பெப்ரவரி நடுப்பகுதியில் செய்யப்பட்ட பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பேரூந்துக் கட்டணங்கள் என்பனவற்றின் மேல் நோக்கிய விலைத் திருத்தங்கள், மின்வலுப் பட்டியல் மீதான மேலதிகக் கட்டணங்கள் என்பன முழுக் காரணமாக அமைந்திருந்ததுடன் இது கொ.நு.வி. சுட்டெண்ணின் மீதும் ஓரளவு தாக்கத்தினைக் கொண்டிருந்தது. இம்மாத காலப்பகுதியில் போக்குவரத்து (4.6 சதவீதம்); வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (1.8 சதவீதம்) என்பனவற்றிற்கான சுட்டெண்கள் அதிகரித்த போதும் சுட்டெண் மீதான தாக்கம் உணவுத் துணைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியினால் எதிரீடு செய்யப்பட்டது. மேம்பட்ட உள்நாட்டு வழங்கல், முக்கியமாக, உணவு மற்றும் வெறியமல்லாக் குடிபானங்களின் துணைவகை 1.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடையப் பங்களித்தது.

குறிப்பாக, பெரும்பாலான காய்கறி வகைகள் மற்றும் மீன், அரிசி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டை, தேசிக்காய் மற்றும் பச்சை மீளகாய் என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பங்களித்தது. மேலும், ஆடை மற்றும் காலணி (0.9 சதவீதம்); தளபாடம், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுப்பொருட்களின் பேணல் (0.2 சதவீதம்) என்பனவற்றின் துணை வகைகளினது விலைகள் இம்மாத காலத்தில் அதிகரித்தன. எனினும், சுகாதாரம், தொடர்பாடல் மற்றும் கல்வி ஆகி

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply