கூட்டமைப்பு மேற்குலக நாடுகளின் கைப்பொம்மை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்குலக நாடுகளின் கைப்பொம்மையாக செயற்பட்டு வருவதுடன் மக்களையும் தவறாக வழிநடத்துகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்காவிற்கு சற்றும் அக்கறை கிடையாது. ஆனால் தனது அரசியல் நோக்கங்களை முன்னிலைப் படுத்துவதற்காகவே இலங்கைக்கு எதிரான பிரேரணையினை முன்வைக்க முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.
இத்துடன் தென் ஆசிய பிராந்திய வலயத்தில் தனது அதிகாரத்தை விரிவாக்கிக்கொள்ளும் நோக்கில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது.
அத்துடன் ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பெருமளவிலான நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவிற்கான ஆரம்பக் கட்ட படையெடுப்பில் படையெடுத்துச் சென்றவர்களுள் இவரும் ஒருவராவர். அங்கு தாங்களும் வந்திருக்கின்றோம் என்ற பெயருக்கு அறிக்கைகளை விட்டுவிட்டு வெறுங்கையுடன் அதே படை திரும்பி நாட்டுக்கு வந்துள்ளது. வந்தும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் அறிக்கைக்கு மேலாக அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
தாங்கள் அங்கு ஏதோ புதிசாக செய்து விட்டு வந்ததாக அவர்களது கதைகள் நீண்டுகொண்டு செல்கின்றது. இவர்கள் அங்கு சென்றமையினால் எதுவித பலனும் இல்லை என்ற கருத்துக்கள் பலரிடம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply