புலிகளின் 2ஆம் நிலைத் தலைவர்கள் விரைவில் சரணடைவராம்: கருணா அம்மான்
விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர்கள், இராணுவத்தில் சரணடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர், கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
கட்டுப்பாடற்ற பகுதிகளை நோக்கி இராணுவத்தினர் நெருங்கிவரும் நிலையில், விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் சரணடைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றபோதும், சூசை, பானு மற்றும் நடேசன் போன்றோர் சரணடைவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லையென கருணா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருக்கும் போராளிகள் பலர் தமது ஆயுதங்களை வீசிவிட்டு அவ்வமைப்பிலிருந்து வெளியேற ஆரம்பித்திருப்பதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உயர்மட்டத் தலைவராகவிருந்த கருணா தெரிவித்தார்.
முல்லைத்தீவு விரைவில் வீழும். அதன் பின்னர் விடுதலைப் புலிகள் காட்டுக்குள் சிறு சிறு குழுக்களாக ஒழித்திருப்பார்கள். தற்பொழுது அவர்கள் 40 சதுர அடி கிலோ மீற்றர் பரப்பளவையே தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர் என்றார் கருணா.
அதேநேரம், இந்திய அமைதி காக்கும்படை இலங்கைக்கு வந்திருந்தபோது மேற்கொண்டதைப்போல விடுதலைப் புலிகளால் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தமுடியாது எனவும் கருணா அம்மான் அந்த ஊடகத்திடம் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply