ரணில் தலைமையில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, மன்னாரில் தொடர் ஆர்ப்பாட்டங்கள்

அரசாங்கத்தின் ஏமாற்றுப் போக்கை கண்டித்து வடக்கு கிழக்கு பொதுமக்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சுழற்சி முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஐ.தே.க. திட்டமிட்டுள்ளது என்று கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அடுத்த வாரத்தில் யாழ்ப்பாணத்திலும் மன்னார் மற்றும் கிளிநொச்சியிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வினை யாழில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே கயந்த கருணாதிலக எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

உழைக்கும் மக்களையும் பெரும் இழப்புகளை சந்தித்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் உரிமைகளையும் வலியுறுத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி யாழில் மேதின நிகழ்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதியும் மன்னாரில் 16 ஆம் திகதியும் 18 ஆம் திகதி கிளிநொச்சியிலும் தொடர் போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply