இயற்கை வளங்கள் குறித்து இலங்கையில் விரிவாக ஆய்வு : அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா
இலங்கையில் காணப்படும் இயற்கை வளங்கள் குறித்து விரிவான ஆய்வு களை நடாத்து வதற்கு உத்தேசிக்கப்பட் டிருப்பதாக சுற்றாடல் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று பாரா ளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.எண்ணெய் வள ஆய்வு நடவ டிக்கைகளை கடல் மாசடையாதவகையில் முன்னெடுப்பதிலும் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடல்சார் தீழ்ப்பு தடைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பாக 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 07ம் திகதி வெளியிட ப்பட்ட 1709/15ம் இலக்க அதி விஷேட வர்த்த மானியில் பிரசுரிக்கப் பட்டதும் 2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்கு விதி களை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகை யில், எம்மைச் சூழவுள்ள சமுத்திரங்கள் மாசடைவதைத் தவிர்ப்பதும், மாசடையும் போது நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதும் எமது பொறுப் பாகும். எம்மைச் சூழவுள்ள கடலில் பல கப்பல்கள் தினமும் பயணம் செய்கின்றன. கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட ஏனைய துறைமுகங்களுக்கும் கப்பல்கள் வந்து செல்கின்றன.
இச்சமயத்தில் இக்கப்பல்களில் சேரு கின்ற கழிவுகளை ஒழுங்குமுறையாக அப்புறப்படுத்துவதை உறுதிப்படுத்துவதிலும் நாம் விஷேட கவனம் செலுத்தியுள்ளோம். இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபைக்கு உள்ளது. இதனை வலுப்படுத்தவே இந்த ஒழுங்கு விதியை சபைக்குக் கொண்டுவந்துள்ளோம்.
இலங்கை இப்போது துரிதமாக வளர் ச்சி பெற்று வருகின்றது. இவ்வாறான சூழலில் எமது இயற்கை வளங்கள் குறித்து விஷேட கவனம் செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். வளர்ச்சி அடைந்துவரும் ஒரு நாட்டுக்கு அந்நாட்டின் இயற்கை வளங்கள் பெரிதும் பயன்படக் கூடியது. எமது இயற்கை வளங்களைக் கொண்டு எம்மை வளப்படுத்திக் கொள்ள முடியும். அதனால் எமது இயற்கை வளங்கள் குறித்து ஆய்வுகளை நடாத்தத் தீர்மானித்துள்ளோம்.
எமது நாட்டில் இயற்கை வளங்கள் தொடர்பான சில சட்ட ஏற்பாடுகள் இறுக்க மாக உள்ளன. அவ்வாறான சட்ட ஏற்பாடுகளில் திருத்தங்களைச் செய்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சுபீட்சத்தையும், விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
அவுஸ்திரேலியா நாடு அந்நாட்டின் இயற்கை வளங்களைச் சந்தைப்படுத்தியே அதிக அந்நிய செலாவணியைப் பெற் றுக்கொள்கின்றது. என்றாலும் அவ்வாறான இயற்கை வளங்கள் எமது நாட்டில் குறைவாக உள்ளன. எனினும் இங்குள்ள இயற்கை வளங்களைக் கொண்டு உச்ச பயனைப் பெற்றுக்கொள்வது மிக அவசியம்.
அண்மைக்காலமாக நாட்டில் மணலுக்கு அதிக கேள்வி நிலவுகின்றது. இதனால் கங்கைகளில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையும் அதிகரித்துள்ளது. அதேநேரம் மண்ணம்பிட்டி, ஹசலக்க பிரதேசங்களில் மணல் அகழ்வுக்கு இடமளிக்கப்பட்டுள்ளன.
என்றாலும் அதிகரித்துச் செல்லும் மணல் தேவையை நிவர்த்தி செய்யவென கடல் மணலை கழுவி சந்தைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இம்மணல் பரீட்சார்த்தமாக ஏற்கனவே சந்தைபடுத் தப்பட்டுள்ளது. இத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம்.
இதேவேளை மணல் அகழ்வதற்கும், ஏற்றி இறக்குவதற்கும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க அகழ்வு பணியகமே அனுமதிப்பத்திரம் வழங்குகின்றது. இந்த அனுமதி பத்திரம் விஷேட கடதாசியில் அச்சிடப்பட்டுள்ளது.
இருப்பினும் கொழும்பை அண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் போலியான அனுமதிப்பத்திரத்தை அச்சிட்டு விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply