கிளிநொச்சி, ஊரணியில் இருதரப்பும் பாரிய மோதல்: புலிகளின் மோட்டார் தாக்குதலில் படையினர் காயம்

இலங்கை இராணுவத்தின் 57ஆவது 58 படைப் பிரிவுகள் ஊரணியிலும்; கிளிநொச்சி தெற்குப் பிரதேசத்திலும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் பாரிய இழப்பு ஏற்பட்டதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று   தெரிவித்தது.

இந்தப் பிரதேசங்களில் இருதரப்பினருக்குமிடையே இடம்பெற்ற மோதல்களின் போது படையினர் சிலர் காயமடைந்ததாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது.

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலின் போதே படையினர் சிலர் காயமடைந்தனர்.

இதன் பின்னர்; ஊரணியில் படையினர் நடத்திய தேடுதலின் போது விடுதலைப் புலிகளின் இரு சடலங்களையும் T-56 ரக துப்பாக்கிகள் இரண்டினையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

இதேவேளை, இராணுவத்தின் 59 பிரிவுக்கும் புலிகளுக்குமிடையே புதுக்குடியிருப்பு, முள்ளியாவெளிப் பிரதேசங்களில் நேற்று  இடம்பெற்ற மோதல்களின் போதும் புலிகளுக்குப் பாரிய இழப்பு ஏற்பட்டது.

பின்னர் இந்தப் பிரதேசங்களில் தேடுதல் நடத்திய படையினர் புலிகளின் சடலமொன்றினையும் ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டினையும் கைப்பற்றினரெனவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply