யதார்த்தத்தை சிந்திக்க அமெரிக்கா தவறிவிட்டது : தமரா குணநாயகம்
அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தங்களது நகல் பிரேரணையில் எதை எடுத்துரைக்க விரும்புகிறது என்பதை நாம் ஆராய்வது அவசியம். அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தவறு என்று எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. அத்துடன் இலங்கையில் திட்டமிட்ட அடிப்படையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என அமெரிக்கா கூறியிருக்கிறது.
அமெரிக்கா கூறுவதில் ஒரு விடயமே தெளிவாக இருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்தையே அமெரிக்கா வலியுறுத்துகிறதென்று திருமதி தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக இருந்து வரும் திருமதி தமரா குணநாயகம், இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கண்டனப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதில் ஆர்வம் காண்பித்து வருவதற்கான காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அமெரிக்க அரசாங்கம் நோக்கங்களை அடிப்படையாக வைத்து தீர்மானம் மேற்கொள்கிறதே தீவிர உண்மையான யதார்த்தத்தை பற்றி அமெரிக்கா சிந்திக்க தவறியுள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொள்ளத்தயாராக இல்லை.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை அவதானிக்கும் மற்ற நாடுகள் இலங்கை சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்கின்ற காரணத்தினால் தான் அது தண்டிக்கப்படுகின்றது என்ற உணர்வு வலுப்பெற்றிருக்கிறது. நாம் இலங்கையின் செயல் திறனை குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ மதிப்பீடு செய்யலாகாது. எங்கள் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான இந்தப் புனிதப் போரில் கடைசி நிமிடம் வரை நாம் போராட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருமதி குணநாயகம் அளித்த பேட்டியை அப்படியே தருகின்றோம். கேள்வி: இலங்கை மீதான விவாதத்தில் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய நிலைப்பாடு என்ன? திருமதி குணநாயகம்: இப்போது மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை ஆதரவான நிலைப்பாடே தலை தூக்கியிருக்கிறது. ஆயினும் இது விடயத்தில் நாம் மேலும் முயற்சிகளை எடுப்பது அவசியம்.
கேள்வி: இப்போது வளர்ந்து வரும் நாடுகள் பல எங்களை ஆதரிக்க முன்வந்துள்ளன என்ற கருத்து உண்மையானதா? திருமதி குணநாயகம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொள்கை ரீதியிலான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதனால் நம்நாட்டு மக்கள் ஜனாதிபதியை ஒரே குரலில் ஆதரிக்கிறார்கள். அத்துடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ¤ம் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை திரட்டுவதில் வெற்றி கண்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கப்பாட்டு கொள்கையில் நம்பிக்கை வைத்திருக்கிறது. எனவே, ஜெனீவா பேரவையில் இலங்கைக்கு சாதகமான முடிவு ஏற்படும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி: பிரிட்டனின் வெளியுறவு காரியாலயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜெரமி பிரவுன், இலங்கை தோல்வியுற்ற நாடு (Fஐலெட் ஸ்டடெ) என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். இதே கருத்தை நவனீதம்பிள்ளையும் வலியுறுத்தியிருக்கிறாரே?
திருமதி குணநாயகம்: பிரிட்டிஷ் அமைச்சரும் நவனீதம் பிள்ளையும் இலங்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற கருத்தை ஆதரிக்கிறார்கள். அவர்கள் மனதில் எத்தகைய மாற்றம் செய்ய வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. இவர்கள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நாம் ஏற்க முடியாது. நாம் அவ்விதம் செய்தால் எமது தாய் நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் அவர்களிடம் தாரை வார்த்து கொடுப்பதற்கு ஒப்பாக அமையும்.
பயங்கரவாத நாடுகள் அல்லது சட்டவிரோத செயற்பாடுகளில் (றொகுஎ ஸ்டடெச்) ஈடுபடும் நாடுகள் என்ற அணியில் ஒரு இறைமையுடைய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் நாடுகளையும் நாம் சேர்த்துக் கொள்ளலாமே. இலங்கையின் உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொண்டவர்கள் இந்தக் குற்றச்சாட்டை என்றுமே எற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இலங்கை போன்ற ஒரு சிறிய வளர்முக நாட்டின் மீது புரியப்படும் கொடுமைகளை நட்புக்குரிய ஆபிரிக்க, ஆசிய மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகள் கண்டிக்கின்றன. கேள்வி: மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் நடைபெறும் இந்த மோதலை இலங்கைக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் என்று அழைக்கலாமா?
திருமதி குணநாயகம்: இல்லை. இலங்கையை கண்டித்து வரும் இந்த நாடுகள் இலங்கையில் இருந்துவரும் மனித உரிமை பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை. அந்நாடுகள் தமிழர் சிங்களவர் அல்லது வேறு ஏதாவது சமூகம் பாதிக்கப்படுவதை உதாசீனம் செய்வதையே காட்டுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு இன்னுமொரு காரணம் இருக்கின்றது.
மனித உரிமைகள் பேரவையில் பொய், புரட்டு, மாறுபட்ட நிலைப்பாடுகள் கையாளப்படுகின்றன. பெரிய வல்லரசுகள் மனித உரிமை பேரவையையும் வளர்முக நாடுகளை துன்புறுத்தும் ஒரு ஆயுதமாக பயன்படுத்த இப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த வல்லரசு நாடுகள் தாங்கள் முன்னர் ஆட்சி புரிந்த நாடுகளின் இயற்கை மற்றும் பொருளாதார வளங்களை சூறையாடுவதில் ஒரு புதிய ஆர்வத்துடன் செயற்படுவதும், மனித உரிமை பேரவையில் இன்று உருவாகியிருக்கின்ற பிரச்சினைக்கு ஒரு காரணமாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply