குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் தேர்தல் விவாதத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் தான் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையினை அரைமடங்காகக் குறைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஷி தெரிவித்துள்ளார். பிரான்ஸில் தற்போது அதி கூடுதலான எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் வசிப்பதாகக் கூறியுள்ள சார்கோஷி அவர்களைஒருங்கிணைக்கும் செயன்முறையானது மிக மிக மோசமான முறையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்து குடியேற்றவாசிகள் தொடர்பான தனது நிலைப்பாட்டினை நியாயப்படுத்தினார் .பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் சார்கோஷியின் போட்டியாளரான சோசலிஷ வேட்பாளர் பிரான்கொய்ஸ் ஹொலன்ட்டிற்கு அடுத்தபடியாகவே சார்கோஷி உள்ளார்.
குடியேற்றமானது பிரான்ஸுக்குரிய வரப்பிரசாதமாக இருந்தாலும் வதிவிட உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான இறுக்கமான சட்ட விதிகள் மூலம் இது கட்டுப்படுத்த வேண்டுமெனவும் சார்கோஷி கூறியுள்ளார். பத்து வருடங்களாக பிரான்ஸில் வசித்துவரும் குடியேற்றவாசிகளுக்குரிய கொடுப்பனவில் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாகவும் ஹங்கேரிய குடியேற்றவாசியின் மகனான சார்கோஷி கூறியுள்ளார்.
குடியேற்றவாசிகள் மற்றும் இன ரீதியான கருத்துக்களை அடிக்கடி கூறிக்கொள்வதன் மூலம் பிரான்ஸில் நிலவும் கருத்துக்களைப் பிளவுபடுத்துகின்றார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply