சிரியா பெட்ரோலியத் துறை அமைச்சர் ராஜினாமா
கிரிமினல் ஆட்சியின் கீழ், நான் சேவையாற்ற விரும்பவில்லை’ எனக் கூறி, சிரியா பெட்ரோலியத் துறை அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். மக்களின் போராட்டத்தில் இணையப் போவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.சிரியா அதிபர் பஷீர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, மக்கள் கடந்த ஓராண்டாகப் போராடி வருகின்றனர். தான் பதவி விலகினால், பயங்கரவாதிகளின் கையில் ஆட்சி சென்று விடும் எனக் கூறி, ஆசாத் பதவி விலக மறுத்து வருகிறார்.
போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இதுவரை, 8,500 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, பெட்ரோலியத் துறை துணை அமைச்சர் அப்தோ ஹூசாமெதின், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர், யூ டியூப் இணையதளத்தில் குறிப்பிடுகையில், “கிரிமினல் ஆட்சியாளரின் கீழ் சேவையாற்ற விரும்பவில்லை. எனவே, என்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு, போராட்டக்காரர்களுடன் இணைய உள்ளேன்.
இதனால், என் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படலாம். என் குடும்பத்தினர் பழிவாங்கப்படலாம். என் வீட்டின் மீது குண்டு மழை பொழியக்கூடும். ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும், சீனாவும் குரல் கொடுக்கலாம். இதனால், அவர்கள் சிரியா மக்களுக்கு நண்பர்களாக இருக்க முடியாது. மக்களைக் கொன்று குவிக்கும் சிரியா அரசின் பங்குதாரர்களாகத் தான், அந்த நாடுகள் கருதப்படும்’ என தெரிவித்துள்ளார். ஆளும் பாத் கட்சியிலிருந்தும் விலகியுள்ள ஹூசாமெதின், தற்போது தலைமறைவாகியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply