பிரித்தானிய தொழிற் கட்சியும் அமெரிக்காவுக்கு ஆதரவு
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பிரித்தானிய தொழிற்கட்சி ஆதரவை வெளியிட்டுள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளினால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு சகல உறுப்பு நாடுகளும் ஆதரவளிக்க வேண்டுமென பிரித்தானிய தொழிற் கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டக்ளஸ் அலெக்சான்டர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
குற்றச் செயல்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை நடத்துவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தொழிற்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான விசாரணைகள் சுயாதீனமானதாக அமையும் என்பதனை உறுதிப்படக் கூற முடியாது என தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply