ஜனாதிபதிக்கும் இந்திய நிதி அமைச்சருக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜீக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி ஊடாக இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
தீர்மானத்தை முறியடிப்பதற்கு போதியளவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதனை இலங்கை அரசாங்கம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
இதன் காரணமாக ஜனாதிபதி இந்த அவசர பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.
இந்தியாவின் ஆதரவினை இழந்தால், இலங்கைக்கு ஆதரவளிக்கும் மேலும் சில நாடுகளின் உதவியை இழக்க நேரிடும் என குறிப்பிடப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply