தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்தவே வாக்களித்தோம்

இலங்கையின் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக இந்தியப் பிரதமர் காலநிதி மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இலங்கையின் இறைமையில் தலையிடுவதற்கான எண்ணம் இந்தியாவுக்கு கிடையாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே பிரதமர் மன்மோகன் சிங் இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் இந்திய மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மனமோகன் சிங் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்திருந்த பிரேரணைக்கு இந்தியா பெரும்பாலும் ஆதரவளிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களுக்கு சமத்தும், நியாயம் மற்றும் சுயமரியாதை கிடைப்பதற்கான நகர்வுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா இந்தப் பிரேரணைக்கு ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாh

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply