ஜெனீவாத் தீர்மானம் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு ஓர் அத்திவாரம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்
‘‘ஜெனீவாத் தீர்மானம் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு ஓர் அத்திவாரமும் ஆரம்பமுமாகும். இதற்கு மேல் நாம் தான் கட்டியெழுப்ப வேண்டும்’’. இவ்வாறு யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.௭ல்.௭ப்.செயலாளர் நாயகமுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். கல்முனை சின்னத்தம்பி வீதி 3ஆம் பிரிவில் நடைபெற்ற மக்கள் சந்திப்புடனான கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கல்முனை மாநகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரும், ஈ.பி.ஆர்.௭ல்.௭ப்.கல்முனை முக்கியஸ்தருமான சிவசுந்தரம் புண்ணியநாதனின் (கரன்) ஏற்பாட்டிலும், மட்டக்களப்பு மாவட்ட கட்சி செயலாளர் ரவி தலைமையிலும் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply