தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கம் அழைப்பு
தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தொடர்ந்தும் எதிர்பார்த்து இருப்பதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜெனீவா பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முறியடித்துக் கொள்ளவில்லை எனவும், இந்த பேச்சுவார்த்தைகளை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்தும் நடத்த அரசாங்கம் திண்ணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தெரிவுக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைந்துக் கொள்ள வலியுறுத்துமாறு, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தம்முடனான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply