இலங்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் : தயான் ஜயதிலக்க
இலங்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தொடர்பில் இலங்கை மியன்மாரிடம் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மியன்மாருக்கு எதிராக தீர்மனம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் பின்னர் மியன்மாரில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் மியன்மாருக்கு எதிராக சர்வதேச சமூகம் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், நடைபெற்று முடிந்த மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் மியன்மாருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் பின்னர் மியன்மாரின் மனித உரிமை நிலைமைகள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மிக நீண்ட காலமாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜனநாயகக் கட்சித் தலைவி ஆன் சான் சூ கீ யை அந்நாட்டு அரசாங்கம் விடுதலை செய்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் தொடர்பில் அராசங்கம் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply