இந்திய பாராளுமன்றக் குழு இலங்கைக்கு விஜயம்

இந்திய பாராளுமன்றக் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்திய சர்வகட்சி பாராளுமன்றக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என குறிப்பிடப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
 
பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் இந்த விஜயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த விஜயத்தில் கலந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
 
கடந்த பெப்ரவரி மாதம் 11ம் திகதி இந்திய சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய இருந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த விஜயம் ஒத்தி வைக்கப்பட்டிரு;தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply